இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலையிடம் சுப்பிரமணியசாமி குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், மூத்த தலைவர்களை பற்றி நான் பேசமாட்டேன். சுப்பிரமணியசாமி அவர்கள் தொடர்ந்து நம்முடைய பாரத பிரதமர் பற்றி என்ன பேசுகிறார் என்று தெரியாது. அண்ணாமலை போய் சில பேர் காலில் விழுந்தா… அண்ணாமலைய பாராட்டி பேசுவாங்க. இந்த கட்சியில் சில பேர் நாங்க தான் எல்லாம் என  நினைக்கிறாங்க. அப்படி எல்லாம் அண்ணாமலையால இருக்க முடியாது.

30 வருடமா 40 வருடமாக நாங்கள் தான் பாஜகவை பார்த்துட்டு இருக்கோம் அப்படின்னு சொல்றாங்க. அண்ணாமலை வீட்டுக்கு வரணும், டீ குடிக்கணும், நாம் பெரிய ஆளுன்னு  அண்ணாமலை ஏத்துக்கட்டும். அப்படி எல்லாம் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. அது சுப்பிரமணியசாமி  உட்பட எல்லாருக்கும் பொருந்து.

தமிழக மக்களிடம் நேரடியாக நாங்க அரசியல் பண்ணிட்டு இருக்கோம். தமிழக மக்களுக்கு பாஜக கட்சி என்னனு தெரியும். அண்ணாமலை யாருன்னு தெரியும். எனக்கு சர்டிபிகேட் கொடுக்க இவங்க யாரும் தேவையில்லை. சுப்பிரமணியசாமி சர்டிபிகேட் வச்சி, நான் என்ன பண்ண போறேன் ? வீட்ல பிரேம் பண்ணி மாட்ட போறேனா ? சுப்பிரமணியசாமி அவர்கள் சர்டிபிகேட் வச்சு தான் அண்ணாமலை ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் கிடையாது என தெரிவித்தார்.