ஈரோடு மாவட்டத்திலுள்ள திட்டமாலை பெரிய நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 26-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், விக்னேஸ்வரா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிலையில் மேளதாளங்கள் முழங்க புனித நீரை எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர உச்சியில் இருக்கும் கலசத்திற்கு ஊற்றிய போது தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.