இந்திய சந்தையில் சோனி நிறுவன தயாரிப்புகளுக்கு எப்போதுமே தனிமவுசு உண்டு. அதன்படி புது 75 சீரிஸ் ஸ்மார்ட் TV-களை சோனி நிறுவனமானது அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலையானது கொஞ்சம் அதிகம்தான். இருந்தபோதிலும் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களையும் சோனி நிறுவனமானது கொடுக்கிறது. இந்தியாவில் சோனி பிராவியா எக்ஸ் 75 எல் எனும் வரிசையில் 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை சோனி நிறுவனமானது அறிமுகம் செய்து உள்ளது.

இந்த 3 ஸ்மார்ட் TV-களும் தரமான அம்சங்களுடன் வெளிவந்து உள்ளது. தற்போது சோனி நிறுவனமானது அறிமுகம் செய்திருக்கும் சோனி பிராவியா எக்ஸ்75 எல் 43-இன்ச், 50-இன்ச், 55 இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் TV-கள் 4கே டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது. அதோடு 3840 x 2160 பிக்சல்ஸ், 4கே எக்ஸ்-ரியா ரியாலிட்டி ப்ரோ, லைவ் கலர் டெக்னாலஜி, மோஷன்ஃப்ளோ எக்ஸ்ஆர், ஃபிரேம் டிமிங் ஆகிய பல சிறப்பம்சங்கள் உள்ளது.