“கூட்டணி கணக்குகள் ஒரு பக்கம் இருக்க, குடும்ப உறவுகளே அரசியல் களத்தில் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளது!” தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ், தற்போது எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

பாரிவேந்தரின் ஐஜேகே (IJK) கட்சியில் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த இவர், அந்தக் கட்சியிலிருந்து விலகி இன்று இலை கட்சியில் தஞ்சம் புகுந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த லீமா ரோஸ், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட சீட் வாங்கும் நோக்கிலேயே அதிமுகவில் இணைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஏற்கனவே லீமா ரோஸின் மகன் சார்லஸ் மார்ட்டின் ‘லட்சிய ஜனநாயக கட்சி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், இப்போது தாய் அதிமுகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருமகன் விஜய் கட்சியில் இருக்க, மாமியார் அதிமுகவில் இணைந்திருப்பது வரும் தேர்தலில் திருவாடானை தொகுதியை இப்போதே கவனிக்க வைத்துள்ளது.