
என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நம்முடைய முதலமைச்சர் மு.க ஸ்டாலினை பொருத்தவரை மகனும், மருமகனும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ஆட்சியே. இந்த ஆட்சியே 30 மாத காலமாக நடப்பது மகனும், மருமகனும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளுக்கு செல்லக்கூடிய சாதாரண குழந்தைகள் படிக்கின்றார்கள். அவர்கள் மீது அக்கறை கிடையாது. அரசு பள்ளிகளிலே சரியாக வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறதா ? கிடையாது… ஆசிரிய பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறதா ? 15000 மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கு, அதை பற்றி அக்கறை கிடையாது.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கிறதா ? அதை பற்றி அக்கறை கிடையாது.. இன்னைக்கு நீட் போன்ற பரீட்சைகள் மூலம் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய மாணவர்கள், மாணவிகள் கூட சொந்தமாக… தன்னுடைய முயற்சியிலே அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு செல்ல முடியும் என்கின்ற நிலை இருக்கின்ற பொழுது குறிப்பாக…
அரியலூரில் நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு கொடுத்த 11 மருத்துவக் கல்லூரியில் அரியலூருக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி கொடுத்து…. ஒரு பக்கம் நீட் மூலமாக அனைவருமே மருத்துவக் கல்லூரிக்கு செல்ல முடியும் என்கின்ற நிலைமை….. இன்னொரு பக்கம் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு 9 ஆண்டுகளில்…. மொத்தம் மருத்துவ சீட்டுகள் எவ்வளவு இருந்தது ? 1947 இல் இருந்து 2014 வரை 67 ஆண்டுகளில் மருத்துவ சீட்டுகள் எவ்வளவு இருந்ததோ, அதை இரட்டிப்பு நம்முடைய பாரத பிரதமர் செய்திருக்கிறார் என தெரிவித்தார்.