முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்ட்சியின் நிறுவனர் கருணாஸ், 12 வயசுல இருந்து மேடையை பார்த்தவன் நான். ஒரு பாடகரா… ஒரு கிராமிய பாடகரா…  கடவுளாகும் ஏற்றுக் கொண்டதனால் என் மீது எத்தனை லாரி கரிகளை அள்ளி பூசினாலும்,  அதை நான் பஞ்சாமிர்தமாக ஏற்றுக் கொள்கின்றேன். இப்படி ஒவ்வொருவரும் தனக்கான யோசிக்கும்போது…  நாளைக்கு இவன இந்த பதியில் இருந்து எடுத்தால் இந்த ஊர்லயே நமக்கு 10,000 ஓட்டு வராது என்கின்ற நிலையை உருவாக்கினால் தான் உங்களை மதிப்பாங்க.

அந்த மரியாதை வரணும். நீ dmkல இரு, admkல இரு, வேற எந்த கட்சியில் வேணாலும் இரு. ஆனால் பிஜேபியில்  மட்டும் இருக்காதே. ஏன்னா… எனக்கு அது பிடிக்காது. எனக்கு பிடிக்குது,  பிடிக்கல என்பது மேட்டர் கிடையாது. அது இந்த மண்ணுக்கு நல்லது இல்ல. நமக்கு நல்லதே இல்லை. ஆவுன்ன்னா தேவரை இழுத்துருதாங்க. அவரு பட்டை போட்டு இருக்காரு.

ஹேய் பட்டை போடுவதற்கும்,  இதுக்கும் சம்பந்தமே கிடையாதுடா. சாமி கும்பிடுவதற்கும், இதுக்கும்  என்னடா சம்பந்தம் இருக்குது. சாமி கும்பிடுவதை வைத்து ஒரு கட்சியாடா?  ஒரு கட்சின்னா,  ஒரு கொள்கை வேணாமா ? ஒரு கோட்பாடு வேண்டாமா ?  நம்ம அந்த அரசியலுக்குள்ள போக வேண்டாம். நமக்கு பிடிக்காது. அவன் அவன் 5000 ஏக்கர், 10,000 ஏக்கர், இருக்கிற ஹார்பர்..அது, இதுன்னு ஆட்டைய போட்டுட்டு,  அதானி, குதானின்னு சுத்திட்டு திரிகிறான். அதெல்லாம் விட்டுட்டாங்க. நாம ஒருத்தரை மட்டும் பிடிச்சுப்பான் என பேசினார்.