மத்தியப் பிரதேசம், சிவபுரி பகுதியில் படம் பிடிக்கப்பட்டதாக கூறப்படும் இந்தக் காட்சி, ஒரு நாகம் மற்றும் நாகினியின் கதையை மையமாகக் கொண்டது. வீடியோவில், நாகம் நிலத்தில் உயிரற்ற நிலையில் கிடப்பதையும், அந்த நாகத்தை சுற்றி அதன் மனைவி நாகினி பரிதாபமாக அலைந்து திரிவதையும் காணலாம். கண்களில் துடிக்கும் வலி, பிரார்த்திக்கின்றது போல தோன்றும் அந்த காட்சி பார்ப்பவர்களின் இதயங்களை உருக வைத்திருக்கிறது.

 

இந்தக் காணொளி “காதல் என்பது மொழி, இனம், ஜாதி, வகை என்ற எந்த எல்லைக்கும் உட்பட்டது அல்ல” என்பதை உறுதிப்படுத்துகிறது. மனிதனோ, விலங்கோ, அல்லது பாம்புப் போல் புலனறிவு குறைந்த உயிரினமோ, ஒட்டுமொத்தமாக அனைவரின் வலி ஒரே மாதிரியாகவே உள்ளது என்பதை இந்த நாகினியின் உணர்ச்சி வெளிப்பாடு மூலம் நன்கு உணர முடிகிறது. பாசம், இழப்பு, ஏக்கம் என்று அனைத்தும் இந்தக் கடும் தருணத்தில் வெளிப்படுகிறது.

இந்த வீடியோவை @DanishgulJunaid என்ற X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது வரை ஆயிரக்கணக்கானோர் இதைப் பார்த்து தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ஒருவர், “இது காதலியின் இழப்பால் ஒருவர் எப்படி மனதளவில் முறிந்து விடுகிறாரோ அதை உணர்த்துகிறது” எனக் கூற, இன்னொருவர் “இந்த நாக-நாகினி ஜோடி இந்திய பாரம்பரியத்தில் எப்போதும் உண்மையான காதலுக்குச் சின்னமாகவே இருந்திருக்கிறது, இன்று அதை நேரில் பார்த்த உணர்வு” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலர், “இந்த நாகினி தன் காதலனை கொன்றவரிடம் பழிவாங்காமல் இருக்க மாட்டாள்” என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.