இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சால் (Palash Muchchal) ஆகியோரின் திருமணம் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

ஏற்கெனவே நவம்பர் 23 ஆம் தேதி நடக்கவிருந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இந்தப் புதியத் திருமணத் தேதி குறித்த வதந்திகள் குறித்துச் ஸ்மிருதியின் சகோதரர் ஸ்ரவண் மந்தனா (Shravan Mandhana) விளக்கமளித்துள்ளார்.

“இந்தப் புதிய வதந்திகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இப்போதைக்குத் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுத்தான் உள்ளது,” என்று கூறி, டிசம்பர் 7 ஆம் தேதித் திருமணத் தேதியைப் பற்றியத் தகவல்களை ஸ்ரவண் மந்தனா முற்றிலும் மறுத்துள்ளார்.

நவம்பர் 23 அன்று, திருமண நாளன்று காலையிலேயே ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு ஏற்பட்ட திடீர் தீவிர மருத்துவ அவசரநிலை (Serious Medical Emergency) காரணமாகத் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பிறகு, மன அழுத்தத்தால் பலாஷ் முச்சாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், பலாஷ் மீது ஏமாற்றுக் குற்றச்சாட்டுகள் (Cheating Allegations) பரவத் தொடங்கின.

மேலும், ஸ்மிருதி தனது நிச்சயதார்த்தப் பதிவுகள் மற்றும் பலாஷ் தொடர்பானச் சமூக ஊடகத் டேக்ஸ்களை நீக்கியதால் வதந்திகள் மேலும் அதிகரித்தன.