இந்திய சந்தையில் ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா X30 5 ஜி ஸ்மார்ட்போனை பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது. இந்த மாடல் செல்போன் 50 ஆயிரம் ரூபாய்க்கும் சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த மாடலை பலரும் விமர்சனம் செய்த நிலையில் நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனின் விலை தற்போது 12,000 ரூபாய் குறைந்துள்ளது. முன்னதாக 48 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா தற்போது 36 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டிலேயே கிடைக்கிறது. நோக்கியா மற்றும் அமேசான் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விலை குறைப்பு செய்யப்பட்டது. இந்த போன் ஐஸ் வைட், கிளவுடி ப்ளூ இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.