மாவீரன் படத்தில் இடம் பெரும் வாய்ஸ் ஓவர் காட்சி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள மாவீரன் படத்தின்  ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துவிட்டது. கோலிவுட்டில்  லியோ படத்தை தொடர்ந்து அதிகம் பேசப்படும் படமாக மாவீரன் அமைந்திருக்கிறது.

படத்தின் டிரைலரின் சில  காட்சிகளில் சிவகார்த்திகேயன் வானத்தைப் பார்ப்பதும், அதன் பின் கோபப்படுவதுமான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். வானத்தில் அப்படி என்ன இருக்கிறது ? எதைப் பார்த்தவுடன் சிவகார்த்திகேயனுக்குள் மாற்றம் நிகழ்கிறது ? என்பது குறித்த பல சுவாரசியமான கேள்விகளுக்கு விடை தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். 

இந்நிலையில் படத்தில் இக்காட்சிகள் அமைக்கப்படும் இடங்களில் வாய்ஸ் ஓவர் ஒன்று கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு நடிகர் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரிடம் வாய்ஸ் ஓவர் கொடுப்பதற்கு படக்குழு அணுகி, கால் ஷீட் இல்லாததன் காரணமாக அதற்கான வாய்ப்பு மிஸ் ஆகி போனது. இருப்பினும், படத்தில் வரக்கூடிய அந்த குரல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்குமென கூறப்படுகிறது.