பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பாவனி. இவர் சமீபத்தில் துணிவு திரைப்படத்தில் தனது காதலர் அமீருடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்நிலையில் பாவனி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் நீண்ட நாட்கள் ஆக கழுத்தில் வலி இருந்து வந்ததாகவும், எதற்காக பல சிகிச்சை எடுத்தும் பலன் இல்லாததால் வலியுடன் வேலையைத் தேடி அலைந்தேன். படப்பிடிப்பில் கூட இந்த வலியை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தினமும் பிசியோதெரபியை தொடர்ந்தும் வலி இன்னும் மோசமாகிவிட்டது. இதனால் தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறி அவர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தற்போது இவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Pavni இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@pavani9_reddy)