கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்த சிவா என்பவருக்கு ரயில் பயணத்தின் போது சென்னை அருகே உள்ள அபி பிரபா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் குறித்து சிவா தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால் அவரோ மகனை பெண் போலீசுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என கூறியுள்ளார் ஆகவே தனது காதலி அபி பிரபாவிடம் எஸ்.ஐ வேடம் அணிந்து வருமாறு சிவா கூறியுள்ளார். அதன்படி அவரும் எஸ்.ஐ வேடம் அணிந்து சிவாவின் தாயை பார்க்க சென்றுள்ளார்.
அது மட்டுமல்லாது தாம்பரம் ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாகவும் சிவா தனது தாயாரிடம் கூறும் படி கூறி இருக்கிறார். இதற்கிடையே இந்த விஷயம் ஊர் முழுக்க பரவிய நிலையில் வடசேரியை சேர்ந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறிந்தனர். பின்னர் எஸ். ஐ போல் வேடம் அணிந்து ஏமாற்றிய அபி பிரபாவையும் அவரது காதலனையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.