சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பச்சேரி கிராமத்தில் சுரேஷ், காவிரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் சத்துமாவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கார்த்திக்(12) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கார்த்திக் தீபாவளி அன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக மின்கம்பி அறுந்து சிறுவனின் மேல் விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.