திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பலவிதமான பட்டாசுகளை வாங்கி தனது வீட்டின் முதல் மாடியிலுள்ள அறையில் வைத்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையான நேற்று மணிகண்டன் பட்டாசுகள் வைத்திருந்த அறையில் இருந்து பட்டாசுகளை எடுத்து வெடித்துள்ளார். இதில் பட்டாசு வெடிக்கும் ஆர்வத்தில் எரிந்த நிலையில் இருந்த ஊதுபத்தியை பட்டாசு வைத்திருந்த அறையிலேயே சிறுவர்கள் மறந்து வைத்துவிட்டு வெளியே சென்று விட்டனர்.

சிறிது நேரத்தில் ஊதுபத்தியில் இருந்து பரவிய தீ காரணமாக பட்டாசு வெடித்து சிதற ஆரம்பித்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தீயை அணைக்க முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. அதே சமையம் வீட்டில் இருந்த அனைவரும் தக்க சமயத்தில் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து நத்தம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.