முதியோர் உதவித் தொகையில் 27 லட்ச ரூபாயை நூதனமாக திருடிய கணினி ஆபரேட்டர். வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் செய்ய வேண்டிய பணியை, தினக்கூலிக்கு அம்பேத்ராஜா என்பவரை நியமித்து கணினியில் பதிவேற்றம் செய்ததால் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது.

2023ம் ஆண்டில், புதுக்கோட்டையில் மட்டும் இறப்பே இல்லாமல் ஒரே அளவில் முதியோர் உதவித் தொகை வழங்கப்படுவதை கண்டு அதிகாரிகள் சந்தேகமடைந்து ஆய்வு செய்த போது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.