கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கு 6 வயதில் மகள் உள்ளார். அந்த சிறுமியின் தாய் நாகர்கோவிலில் இருக்கும் பல சரக்கு கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இளம்பெண் வேலைக்கு சென்ற பிறகு சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவர் சிறுமியின் வீட்டிற்கு சென்று விளையாடுவது போல சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் மாணவரை கைது செய்து நெல்லை மாவட்டத்தில் இருக்கும் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.