நடிகர் ஷரத்கபூர் பிரபல இந்தி நடிகர் ஆவார். இவர் முதன் முதலில் சினிமா துறையில் உதவி இயக்குனராக “லக்ஷ்மன் ரேகா” என்ற படத்தில் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து நடிகராக கார்கில் எல்.ஓ.சி, லக்ஷயா, ஜோஷ் போன்ற படங்களில் நடித்தார். இந்த நிலையில் நடிகர் ஷரத் கபூர் மீது மும்பையை சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் அந்தப் புகாரில், ஷரத்கபூர் தன்னை அவரது வீட்டிற்கு அழைத்ததாகவும், அங்கு தன்னிடம் அத்து மீறி நடந்ததாகவும், தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனால் நடிகர் ஷரத் கபூர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.