சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி உடல்நிலையை அடிப்படையாக வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் தரப்பு வழக்கறிஞர் சார்பில் வாதிடப்பட்டது.

இந்த நிலையில் அவரது உடல்நிலை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றம் ஆனது உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை தனது 22ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை தொடர்பான அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கைய விடுக்கப்பட்டுள்ளது.