நடிகர் தனுஷின் 50 வது திரைப்படத்தில் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷ் தனது 50 வது படத்திற்கான படப்பிடிப்பின் வேலைகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்தை அவரே இயக்கவும் இருக்கிறார். இப்படத்தில் பெரிய அளவிலான கதாபாத்திரத் தேர்வும், அதற்கு ஏற்றார் போல மிரள வைக்கும் திரைக்கதையும் இருக்கப் போவதாக பல தகவல்கள் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்தன. அதன் ஒரு பகுதியாக தற்போது புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதன்படி,
பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. அண்ணன் செல்வராகவன் மூலம் திரையுலகத்திற்கு வந்து தற்போது பல வெற்றிகளுக்கு சொந்தக்காரராக விளங்கி வரும் தனுஷ் தற்போது அவர் இயக்கத்தில் அவரது அண்ணன் செல்வராகவன் எப்படியான நடிப்பை வெளிப்படுத்தப் போகிறார் ? தனுஷ் செல்வராகவன் என்னும் மகா கலைஞனை எப்படி பயன்படுத்த போகிறார் ? என்ற எதிர்பார்ப்பு தற்போது சினிமா ரசிகர்களிடையே பெரிதும் எழுந்துள்ளது.
