மாவீரன் படத்தில் இடம்பெற்றுள்ள காதல் காட்சி குறித்து சிவகார்த்திகேயன் சுவாரஸ்ய தகவல் ஒன்றை அளித்துள்ளார்.

ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ள மாவீரன் திரைப்படத்திற்கான வெளியீட்டு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தின் ஒரு சில பாடல்கள், ட்ரெய்லர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தில் நாயகன் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும், நாயகி அதிதி சங்கர் அவர்களுக்கும் இடையிலான காதல் காட்சிகள் எப்படி இருக்கும்   என்ற ஆர்வம் ரசிகர்களிடையே தற்போது எழுந்துள்ளது. அதற்கு காரணம் வண்ணாரப்பேட்டை பாடல் தான். இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என எந்த சமூக வலைதளத்திற்குள் சென்றாலும் இந்த பாடல்கள் தான் சமீபத்தில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் இருவருக்கும் இடையேயான காதல் காட்சி குறித்து சிவகார்த்திகேயன் பெங்களூர் பிரஸ் மீட்டில் தகவல் ஒன்றை அளித்துள்ளார். அதில், வண்ணாரப்பேட்டை பாடலை தவிர படத்தின் எந்த இடங்களிலும் எனக்கும் அதித்தி சங்கர் அவர்களுக்கும் காதல் காட்சிகள் இல்லை என தெரிவித்துள்ளார்.

காதல் காட்சி உட்பட பிற காட்சிகளுக்கு பெரிதளவு முக்கியத்துவம் அளிக்காமல், படத்தின் மைய கதையை மூலமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பது போலவும், இது ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தும் எனவும் சினிமா ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.