
இன்று பிரதமர் மோடி தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உட்பட பல பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி தமிழக வருகையையொட்டி தமிழ்நாட்டில் அவர் செல்லும் இடமெல்லாம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “சாலையின் இருபுறமும் பாஜக தொண்டர்களும் மக்களும் திரளாக நின்று பிரதமரை வரவேற்பார்கள். பிரதமருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பல கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.