பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார்.

மோடி தமிழகத்திற்கு வருகை தரும் போது #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை எதிர்க்கட்சிகள் டிரெண்ட் செய்வது வழக்கம். ஆனால் இந்த முறை #Vanakkam-Modi என்ற ஹேஷ்டேக் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. எதிர்க்கட்சிகள் முயற்சித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை டாப் இடத்தில் கொண்டு வந்தாலும், மீண்டும் பாஜகவினர் வணக்கம்மோடி என்ற ஹேஷ்டேக்கை முதலிடத்துக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.