இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

இந்நிலையில் பொது இடங்களில் மாஸ்க அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை. தேவைப்பட்டால் மாஸ்க் கட்டாயமாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதித்தோர் மருத்துவர்களின் ஆலோசனைபடியே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். கடந்த 3 நாட்களுக்கு முன் பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில், அமைச்சரின் இந்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.