நாமக்கல் மாவட்ட ஆட்சியராக கடந்த 2023 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி உமா பதவி ஏற்றார். ஆரம்பத்தில் இவர் தமிழ்நாடு அரசின் மருத்துவ துறையில் அதிகாரியாக வேலை பார்த்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்ட உமா கொரோனா காலகட்டத்தில் மாநில அளவில் திறம்பட செயல்பட்டார்.

பல்வேறு மாவட்டங்களில் நிர்வாக பணிகளையும் மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமாவுக்கு தனி சிறப்பு உள்ளது. இவர் 24 மணி நேரமும் ஆய்வு பணியில் ஈடுபட்டு பணிகள் முறையாக நடக்கிறதா என கண்காணித்துக் கொண்டே இருப்பார்.

யாராவது பணியை சரியாக செய்யவில்லை என்றால் அவர்களை கண்டிக்கவும் தவற மாட்டார். தற்பொழுது தமிழக அரசு 55 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்தது. அதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் ஒருவர். தற்போது தமிழக அரசின் சிறப்பு திட்ட நடைமுறை துறையில் கூடுதல் செயலாளராக பணியிட மாற்றம் செய…