
அதிமுகவின் துணை பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாத் மதுரை மாநாட்டில் பேசியபோது, வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும் என்றார் வள்ளுவர். வள்ளுவரின் வாக்கிற்கிணங்க பூவுலகில் அவதாரம் எடுத்து வையத்துள் வாழ்வாங்க வாழ்ந்து மறைந்திருக்கின்ற நமது கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களையும், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் வணங்கி தொடங்குகிறேன். இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், மனிதநேய செம்மல், சேலத்து மாங்கனி அதுபோல சுவையானவர்.
எல்லா வகையிலும் ஆளுமை, தலைமையும் – தலைமை பண்பும் மிக்க கழகத்தின் பொதுச்செயலாளர், இன்னும் சொல்லப்போனால் என்றைக்கும் நிரந்தர பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர், அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களே மற்றும் இங்கே வருகை புரிந்திருக்கின்ற கழகத்தினுடைய மரியாதைக்குரிய நிர்வாகிகளே, வருகை தந்திருக்கின்ற இலட்சோதி லட்சம் தொண்டர்களே…
தமிழகமே ஒற்றுமொத்தமாக திரண்டு வந்தது போல் மதுரை மாநகரிலே சங்கமித்துள்ள அன்பிற்குரிய கழக நிர்வாகிகளே… இன்றைக்கு மதுரையில் நடந்த கூட்டத்தை பார்க்கின்றபோது… இந்த மாநாட்டை பார்க்கின்றபோது… இங்கே முக்கடலும் சங்கமித்தது போல, இந்து மகா சமுத்திரமும், அரபிக் கடலும், வங்காள விரிகுடாவும் ஒட்டுமொத்தமாக சங்கமித்தது போல…
இங்கே ஒட்டுமொத்த தமிழகமும் இந்த கூடல் நகரில் வந்து கூடியிருக்கிறது. “பார் சிறுத்தலால் படை பெருத்ததோ- படை பெருத்தலால் பார் சிறுத்ததோ” என்று கூறும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக இந்த கூட்டத்தை பார்க்கின்றபோது நமக்கு எல்லோருக்கும் பிரமிப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார்.