செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  ஒரே ஒரு குற்றச்சாட்டு நான் கேட்கிறேன்…..  இந்த இயக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செய்தது என்ன ? என்ன தவறிழைத்தார் ? அவர் கொடி கட்டக்கூடாதுன்னு சொல்றியே….. இந்த கொடி  நீ கண்டுபிடித்ததா ?  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொடுத்த கொடி….  புரட்சித்தலைவி எம்ஜிஆர் கொடுத்த கட்சி அலுவலகம். இதுக்கும் எடப்பாடிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ? அவை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை  அலுவலகத்திற்கு புரட்சித்தலைவருடைய பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் எடப்பாடி.

அலுவலகத்துக்கு எங்களால ஏன் போக முடியல ? நீதிமன்றம் தற்காலிகமாக சொல்லி இருக்கிறது. எந்த தீர்ப்புகளும் மாற்றுதலுக்குரியவை. நீதிமன்றத்தின் கடை நிலை படிக்கட்டுக்கு வந்து விட்டதாக நாங்கள் உணரவில்லை. இன்னும் வாய்ப்பு இருக்கிறது.  கடைசி பந்துகளில் மாறுகிற விளையாட்டு உண்டு.   நீதிமன்றம்,  தேர்தல் ஆணையம் அனைத்தும் ஜானகி அம்மா பின்னாடி நின்னாலும்….  சேவல் சின்னத்தில் தனியாக நின்றார்.

தேர்தலுக்கு 28 நாட்களுக்கு முன்னாடி கட்சியை பதிவு செய்து,  சைக்கிள் என  சின்னத்தை வாங்கி மூப்பனார் ஓட்டல…. 50 சீட்டு ஜெயிக்கல. அரசியல்  காலண்டரில் கடைசி பக்கம் கிடையாது. மக்கள் தான் எஜமானர்கள்….  அவர்கள் செய்வதுதான் தீர்மானம். இன்றைக்கு காவி வேட்டியை கட்டிக்கொண்டு அண்ணன் ஓபிஎஸ் நடந்து போவதை பார்த்து மனசாட்சி உள்ள அண்ணா திமுக தொண்டன் கண்ணீர் வடிக்கிறான் என தெரிவித்தார்.