கேரளா மாநிலத்தின் பிஸியான சாலையில் கார் ஒன்றின் சன்ரூஃப் வழியாக சிறிய பனை மரம் ஒன்று வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் சுவாரசியமான காணொளி இணையத்தில் வைரலாகி பலரையும் சிரிக்க வைத்துள்ளது. வாகன நெரிசலில் சிக்கியிருந்த மஞ்சள் நிற டாட்டா சியரா காரின் மேற்கூரையில் உள்ள ஜன்னல் வழியாக அந்தச் செடி வெளியே தெரியும்படி எடுத்துச் செல்லப்பட்ட விதம், பார்ப்பதற்கு கார் மேலே மரம் முளைத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

 

 

View this post on Instagram

 

A post shared by V I S H N U (@viiztrrix)

ஆடம்பரத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் சன்ரூஃபின் உண்மையான பயனை இப்போதுதான் புரிந்துகொண்டோம் என்று நெட்டிசன்கள் கிண்டலாகப் பதிவிட்டு வரும் நிலையில், இக்காணொளி ஏற்கனவே 27 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

அதே சமயம் கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூருவில் சிறுவன் ஒருவன் இதுபோன்று சன்ரூஃப் வழியாக வெளியே நின்றபோது விபத்தில் சிக்கியதை நினைவுபடுத்தும் சமூக ஆர்வலர்கள், சன்ரூஃபை வெறும் காற்றோட்டத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பாதுகாப்பற்ற முறையில் செயல்பட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.