திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  ஒரு வாரம் முழுக்க ஓய்வில்லாமல் உழைத்தாலும் அடுத்த நாள் கழக  உடன்பிறப்புகளோடு இருக்கப் போகிறோம் என்கின்ற எண்ணம் வந்து விட்டாலே புதிதாக ஒரு எனர்ஜி வந்து விடும். ஏன்னா நீங்க தான் சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி. இந்த பாசப்பினைப்பை உடன்பிறப்பே என்ற ஒரே சொல் மூலமாக உருவாக்கி கொடுத்தவர் தான் நம் தமிழின தலைவர் கலைஞர் அவர்கள். திருவண்ணாமலையின் தீபமும் போல தான்,  திருவண்ணாமலையும்  திமுகவும். யாராலும் பிரிக்க முடியாது.

பல்வேறு வரலாற்றை நம்முடைய பொதுச் செயலாளர் அவர்கள் உங்கள் இடத்தில் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். எனவே ஒன்று இரண்டை மட்டும் நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன். நம் கழகம் உருவான அன்று நடந்த முதல் பொதுக்கூட்டத்தில் 1,451 ரூபாய் வசூல் ஆச்சு. அதில் 100 ரூபாயை இதே திருவண்ணாமலையை சார்ந்த நம்முடைய அன்பிற்கு மரியாதைக்கும் உரிய ப. உ. சண்முகம் அவர்கள் வழங்கியது  அந்த 100 ரூபாய்.

1957 தேர்தலில் அப்போதான் முதல் முதலாக நாம் தேர்தலில் போட்டியிடுகின்றோம். அந்த தேர்தலிலே 15 பேர் வெற்றி பெற்றோம்.  அந்த 15 பேரில் மூன்று பேர்  இந்த மாவட்டத்துகாரங்க … முதல் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு பேர் வெற்றி பெற்றார்கள். அந்த ரெண்டுல ஒன்னு திருவண்ணாமலை தொகுதி. சட்டமன்றத்திற்கு  15 பேரில் மூன்று பேர்.  ஒன்று ப. உ. சண்முகம், இரண்டு பிஎஸ் சந்தானம்,  மூன்று களம்பூர் அண்ணாமலை.

நாடாளுமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் அல்லவா?  அவர் யாரென்று கேட்டால்…. ஈரா தர்மலிங்கம். இன்னைக்கும் அவங்க பெயரை வரலாறு சொல்லிக்கிட்டு இருக்கு. அப்படிப்பட்ட நம்முடைய ப. உ. ச அவர்களுக்கு,  ஈரா தர்மலிங்கம் அவர்களுக்கும் கொஞ்ச நாள் முன்னாடி நம்முடைய மாவட்ட கழகம் சார்பாக 100 ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.