செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, சீமான் நடத்துகின்ற அரசியல் சகிக்க கூட முடியவில்லை… அவர் நோக்கத்திற்கு…. அவருடைய வாழ்க்கையே ஒரு மாதம் தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கையாக ஆகிவிட்டது. ஆகவே இந்த நிலையில் எளிமை, நேர்மை, செம்மை. இவற்றை அடிப்படையாகக் கொண்டு….  அறம் சார்ந்த அரசியலை  மையமாகக் கொண்டு…

சந்தைபடுத்தப்பட்ட அரசியலை சமூகப்படுத்துவோம் என்பதை கொள்கையாகக் கொண்டு,  இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு வரையப்படும்… பசுமை தமிழ்நாட்டைக் குறிக்கிறது. தமிழ்நாட்டின் வகைப்படத்தில் காந்தி நடக்கிறார். அவர் ஒரு வழியில் இந்த இளைஞர்கள்,  தமிழ்நாடு பின்பற்றி நடக்கிறது என்பது அதற்கு அடிப்படை.

ஆகவே ஒரு புதிய கட்சிக்கான தேவை ஏற்பட்டதன் காரணம் 50 ஆண்டுகளாக ஊழல். அந்த வாழ்க்கை முறையை நிறுவுவதற்கு 50 ஆண்டுகளாக இரண்டு பேரும் மாறி மாறி செய்கின்ற முயற்சிக்கு, இந்த கூட்டணி கட்சிகள் எல்லாம் துணை போகின்றன என்கின்ற காரணத்தினால்…. ஒரு எதிர்நிலை அரசியல் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. மக்களிடம் விழிப்பு ஏற்படுத்தப்படவில்லை. அதன் காரணமாக ஒரு புதிய கட்சியை பெற வேண்டிய நிலை வந்தது என தெரிவித்தார்.