திராவிட கட்சிகள்  தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மறந்து விட வேண்டியது தான் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், என்கிட்ட இல்லாதது பணபலம். அதற்குப் பிறகு  பெரிய ஊடக ஆதரவு அதெல்லாம் இல்ல. இப்போ நாம்  கவனிக்கப்படற உயரத்துக்கு போனும். எங்ககிட்ட இருக்கிற வலிமையின் கட்டமைப்பு  எல்லாருக்கும் தெரியும். எங்களுடைய பயணம்  2024- 2026-க்குள்ள வலுவான கட்டமைப்பை உருவாக்கி,  தேர்தலை ( போரை ) எதிர்கொள்வது தான்.

இன்றைக்கு தொடங்கி இருக்கிற பயணத்தை 2026 வரையில் நிறுத்தாம ஓடுவேன். அந்த வேலையை தொடங்கி இருக்கிறேன்.2024 தேர்தலில் பார்ப்பீங்க. பேரழிச்சியா நான் எதிர்கொள்வேன். என்னைப் பொறுத்த வரைக்கும் எங்க தாத்தா காமராஜரோ அல்லது முத்துராமலிங்க தேவர்,  தாத்தா கக்கன்,  ஜீவானந்தம்,  சிங்காரவேலர் இவங்களெல்லாம் இன்னைக்கு இந்த சமூகம் உண்மையிலேயே நான் வெளிப்படைய சொன்னா பைத்தியக்காரனா தான் பாக்கும்.

பிழைக்க தெரியாதவர்கள் பைத்தியக்காரர்கள் இவுங்க. ஒரு அலுவலகத்திலேயே நேர்மையான வேலை செஞ்சா  என்ன ஆகும்ன்னு உங்களுக்கு தெரியும். எளிமை, அந்த உண்மை,  நேர்மைஇதெல்லாம் இப்போ போச்சு. கூடுமானவரை இப்ப 100 ரூபாய் ஒதுக்குனா…  அதுல ஒரு 20 பைசா எடுத்துட்டு 80 காசு மக்களுக்கு செலவிட்டால் ஒன்னும் இல்லை. ஆனால் 80 காசை எடுத்து 20 காசு செலவழிக்கிறதுலதான் கொடுமையா இருக்கு. அந்த 20 காசு நேர்மையா எல்லாத்துக்கும் போச்சா  எழுப்பினார்.