ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் தனி திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு கலைத் திருவிழா நடைபெறும். இதில் மாணவர்களுக்கு நாடகம், கதை ஒப்புவிப்பு, கவிதை, சிற்பம் வடிவமைப்பு, ஓவியம் என பல பிரிவுகளில் போட்டி நடத்தப்படும். கடந்த டிசம்பர் 30- ஆம் தேதி சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஷாஜகான் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் படிக்கும் தமிழிசை என்ற மாணவி கலையரசி என்ற பட்டத்தை வென்றார். அந்த மாணவி ஆங்கிலத்தில் கதை எழுதுதல், நாடகம், பறை இசை ஆகிய மூன்று பிரிவுகளிலும் பரிசு வென்றார். இதனால் தமிழிசைக்கு கலையரசி என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் , சக ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் பாராட்டியுள்ளனர்.