கடலூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சங்குப்பம் கன்னி கோவில் தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சித்தார்த்தன்(17) 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொது தேர்வு முடிவு வெளியானதில் சித்தார்த்தன் தோல்வி அடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த சித்தார்த்தன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சித்தார்த்தனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சித்தார்த்தன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.