தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் படு கிளாமராக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பள்ளி காலத்தில் அந்த மாதிரியான படத்தை பார்த்திருக்கேன் என்று ஓப்பனாக பேசியுள்ளார்.

அதில், “என்னுடைய நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்பொழுது அங்கே இருந்த சிடி பிளேயரில் அங்கிருந்து ஏதோ ஒரு CD-யை எடுத்து போட்டோம். அந்த படம் ஒளிபரப்பானது, அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் பார்க்கவில்லை” என்று வெளிப்படையாக  கூறியுள்ளார்.