தமிழ் சினிமாவில் பிகில் மற்றும் விருமன் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. இவரின் எதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது தந்தை ரோபோ சங்கரை போலவே இவருக்கும் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திரஜா மட்டுமல்லாமல் இவரின் குடும்பத்தினரும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திரஜாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில்  தற்போது இந்திரஜா அவரது தாயுடன் சேர்ந்த குத்தாட்டம் போட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் இந்திரஜாவினை நீங்களும் இப்படி ஸ்லிம் ஆகணும் அம்மா மாதிரி என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

INDRAJA SANKAR இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@indraja_sankar17)