எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் சூப்பர் ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற மருத்துவ காப்பீடு திட்டம் ஒன்றை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு 27 நிலையான கவரேஜ்கள் மற்றும் 7 விருப்ப கவரேஜ்கள் வழங்கப்படும். மருத்துவ செலவு தொடர்புடைய நிதி சுமையை குறைக்கலாம் எனவும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவையை பொருத்து 3 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரை இன்சுரன்ஸ் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் பேரில் பாலிசி காலத்தை ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை தேர்வு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து சூப்பர் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைந்திருக்கும் வாடிக்கையாளர்கள் தீவிர நோய்களுக்கான காப்பீடு தொகையை மூன்று மடங்கு வரை கூடுதலாக பெறலாம். மேலும் வாடிக்கையாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நேரத்தில் மருத்துவம் அல்லாத செலவுகளுக்கும் இந்த காப்பீடு தொகை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.