இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வரும் வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களும் கடன் வழங்குவதற்கு ஏதாவது ஒரு ஆவணத்தை சாட்சியாக பெறுகின்றன. அவ்வாறு பெரும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குபவர்கள் கடனை திருப்பி செலுத்திய 30 நாட்களுக்குள் அசால் சொத்து ஆவணங்களை கடன் வாங்குபவர்களுக்கு வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஒருவேளை அவ்வாறு செய்ய தவறினால் கடன் வழங்குபவர்கள் தங்களது கடனாளிகளுக்கு ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் சொத்து சீரமைப்பு நிறுவனம் மற்றும் கூட்டுறவு வங்கிகள் போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் என அனைத்திற்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.