கார்களுக்கு 6 ஏர்பேக்குகளை அரசு கட்டாயமாக்காது என்று மத்திய சாலைப்  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை தெரிவித்தார். கார்களுக்கு ஆறு ஏர்பேக் விதியை கட்டாயமாக்க நாங்கள் விரும்பவில்லை என்று கட்கரி கூறினார். கடந்த ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி, பயணிகள் கார்களில் ஆறு ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதை ஓராண்டுக்குள் அக்டோபர் 1, 2023-க்கு அரசாங்கம் ஒத்திவைத்தது.

அக்டோபர் 1, 2022 முதல் பயணிகளின் மேம்பட்ட பாதுகாப்பிற்காக எட்டு இருக்கைகள் கொண்ட வாகனங்களில் ஆறு ஏர்பேக்குகளை கட்டாயமாக்க அரசாங்கம் முன்னதாக திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.