ஜார்கண்ட் மாநிலம் ராக்சுகுடோ கிராமத்தில் சில பேர் சைபர் திருட்டில் ஈடுபடுவதாக அகல்யபூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 4 பேரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை சோதனையிட்ட காவல்துறையினர் அதில் 1 லட்சம் பேரின் வங்கித்தரவுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதே சமயம் லட்சத்திற்கும் அதிகமானவர்களின் செல்போன் எண் உள்ளிட்ட தரவுகள் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் இருந்தை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட  4 பேரில் 3 பேர் ஏற்கனவே சைபர் குற்றங்களில் ஈடுபட்டு சிறை சென்று திரும்பியவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.