உத்திரபிரதேசம், பீகார், மத்திய பிரதேஷ் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சத் பூஜை என்ற முக்கியமான பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையின் போது பக்தர்கள் உண்ணா நோன்பு, சூரியனுக்கு, பிராத்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் தியானம் செய்தல் உள்ளிட்ட 4 சடங்குகளை செய்கின்றனர். இந்த ஆண்டுக்கான சத் பூஜை கடந்த 5ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 5ம் தேதி பக்தர்கள் நதிக்கரை கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடியதற்கு பின்பு, உணவு எடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில் டெல்லி காலிந்தி பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் ரசாயன நச்சுனுறை மிதந்து செல்கின்றது. இருப்பினும் பெண்கள் சத் பூஜைக்காக அந்த ஆற்றில் நீராடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து டெல்லி அரசு யமுனை ஆற்றில் குளிக்க தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிராகரித்த நீதிமன்றம் யமுனை நதி மிகவும் மாசடைந்து இருப்பதால் அங்கு யாரும் குளிக்க வேண்டாம். இதனால் மக்களுக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆதலால் பாதுகாப்பான இடங்களில் சத் பூஜை கொண்டாடுங்கள் என்று கருத்து தெரிவித்தது.