கன்னடத்தில் இருந்து தமிழுக்கு “கனகவேல் காக்க” எனும் திரைப்படம் வாயிலாக அறிமுகமானவர் ஹரிப்ரியா. இதையடுத்து வல்லக்கோட்டை, முரண், சமீபத்தில் வெளியான நான் மிருகமாய் மாற ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார் ஹரிப்ரியா. இவருக்கும் கன்னட நடிகரான வசிஷ்ட சிம்ஹாவுக்கும் நேற்று முன்தினம் மைசூரில் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கன்னட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதில் வசிஷ்ட சிம்ஹா கன்னடத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். மேலும் தமிழ் சினிமாவில் “கரை ஓரம்” என்ற திரைப்படத்தில் வசிஷ்ட சிம்ஹா நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.