தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் தலைவாசல் விஜய். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். அதோடு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து உள்ளார். கடந்த 1992 ஆம் வருடம் தலைவாசல் என்ற படத்தில் தான் அவர் அறிமுகமாகி இருக்கிறார். 25 வருட திரைப்பயண வாழ்க்கையில் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளார்.

கடைசியாக தலைவாசல் விஜய் 100% காதல் எனும் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதன்பின் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த அழகு சீரியலில் நடித்திருந்தார். இவருடைய மகள் ஜெய வீனா நீச்சல் வீராங்கனை ஆவார். மேலும் பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை பெற்று இருக்கிறார். இதனிடையில் ஜெயவீனாவுக்கும், பிரபல கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்திற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.