தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்நிலையில் ஏகே 62 திரைப்படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியதாக புது தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது ஏகே 62 திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் சொன்ன கதை நடிகர் அஜித்துக்கு திருப்தி அளிக்காததால் மீகாமன், தடையறத் தாக்க மற்றும் கழகத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி ஏகே 62 திரைப்படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் இணையதளத்தில் தீயாக பரவி வரும் நிலையில் ஏகே 62 படகுழு தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை. மேலும் ஏகே 62 குறித்து பரவும் தகவல்களுக்கு விரைவில் படக்குழு தரப்பிலிருந்து விளக்க வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.