திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 40க்கு 40 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அணி வெற்றி பெறும். எந்த கொம்பனாலும் ஒன்றும்  செய்ய முடியாது. தமிழ்நாடு அரசியல் பக்குவப்படுத்தப்பட்ட அரசியல்.  சனாதன கும்பலுக்கு இடமில்லை, விரட்டி அடிப்போம் என்பதற்கான துணிச்சலை கொண்ட ஒரு தேசம் இது.

அண்ணன் தளபதி அவர்கள் அண்ணாவின் – பெரியாரின் – மடியிலே வளர்ந்தவர். கலைஞரின் அரவணைப்பின் அவருடைய கதகதப்பான சூட்டில் வளர்ந்தவர். அதனால் இன்றைக்கு சொல்லியிருக்கிறார்.  ஆட்சியே போனாலும் பரவாயில்லை எதிர்ப்பில் உறுதியாக இருப்போம் என்று சொல்லுகிறார். இப்படிப்பட்ட துணிச்சல் வாழ்ந்த முதலமைச்சர் நமக்கு  கிடைத்திருக்கிறது நிலையில், அவருடைய தலைமையில் சனாதன எதிர்ப்பை முன்னிறுத்துவோம். அதுதான் மதநல்லிணக்கத்திற்கான வழி என்பதை சொல்லி….

நாம் எந்த மதத்தின் உணர்வுகளையும் காயப்படுத்த வில்லை. எந்த மதத்தின் நம்பிக்கையும் நாம் காயப்படுத்த வில்லை. மத உணர்வுகளையும் நம்பிக்கையும் தம் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிற சங்கபரிவார்களின் இந்துத்துவா  அரசியலை புரிந்து கொள்ளுங்கள். அதுவே மத நல்லிணக்கத்திற்கு தீர்வு என தெரிவித்தார்.