நடன இயக்குனர், நடிகர், டைரக்டர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் இப்போது நடித்திருக்கும் படம் “ருத்ரன்”. இந்த படத்தின் வாயிலாக பைவ் ஸ்டார் கதிரேசன் டைரக்டராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ரிலீஸ் ஆகும் இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து பின்னணி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ருத்ரன் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. ருத்ரன் படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.