பிரபல கன்னட நடிகையான துனிஷா குமெண்டா, சின்னத்திரையில் சீரியலில் நடித்து பிரபலமானார். மேலும் கன்னடாவில் ஒரு சில படங்களில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில்  யூடியூபர் சுஷன் என்பவருக்கு துனிஷா பேட்டியளித்தார். அப்போது யூடியூபர், துனிஷாவிடம் நீங்கள் ஆபாச படங்களில் நடிப்பீர்களா? என கேள்வி கேட்டார்.

அதற்கு துனிஷா, நான் ஒன்றும் ஆபாச பட நடிகை அல்ல. எதற்காக என்னிடம் இப்படிப்பட்ட கேள்வி கேட்டீர்கள்? இந்த கேள்வி கேட்பதற்கு முன்னதாக உங்களுக்கு அறிவு இருக்கவேண்டும். நீங்கள் ஒரு நடிகையிடம் பேச்சிக் கொண்டிருக்கிறீர்கள்” என அதிரடியாக பதிலளித்தார். மேலும் யூடியூபர் சுஷன் மீது துனிஷா போலீசில் புகாரளித்துள்ளார். அதன்படி சுஷன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.