திப்பு சுல்தானுக்கு நடத்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன்,  இந்தக் கூட்டத்தின் காரணமாக தங்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டு வீடும், தங்கள் தூக்கம்  கிரிக்கெட் பாக்கின்ற நிகழ்வு, தொலைக்காட்சி பார்க்கின்ற நிகழ்வு தடைப்படும் என்று கருதினால் என் அருமை உறவுகளை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் எதிர்கால வாழ்வுக்காக வாழ்வையே தியாகம் செய்த மாவீரனை குறித்த வரலாறு பக்கங்களில் மறைக்கப்பட்ட உண்மைகளை எடுத்துக் கூறுகின்ற ஒரு நிகழ்வு. என் அருமை சகோதரர் அலீம் பூவாரி அவர்கள்,  நான் எதை  எதையெல்லாம் பேச வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டு குறிப்பெடுத்து கொண்டு வந்தேனோ… அத்தனையும் அவர் பேசி விட்டார். புனை கதைகளை யார் வேண்டுமானாலும், எப்படி வேணுமானாலும் பேசலாம்… ஆனால்

வரலாற்று பக்கங்களை பாடமாகிக் கொண்ட மாபெரும் சாம்ராஜ்ய சக்கரவர்த்தியின் வரலாற்றை எவர் பேசினாலும், அவர் வரலாற்று பக்கங்களில் புதைந்து கொண்டிருக்கின்ற உண்மைதான் பேச முடியும். அந்த உண்மை எவர் பேசினாலும் ஒரே செய்தியாக தான் இருக்கும். பட்டிமன்ற பேச்சாளர்கள், இலக்கிய பேச்சாளர்கள், அல்லது வேறு விதமான சொற்பொழிவாளர்கள் எதை வேண்டுமானாலும் இடையில் அடித்து விடலாம்.

ஆனால் 19750இல் பிறந்து, தன் இறுதி மூச்சு வரை ஆங்கிலேய ஏகாதியபத்தியத்திற்கு மிகப்பெரிய சவாலாகவும்,  மிக பெரிய மாவீரனாகவும் இறுதி மூச்சு வரை சுதந்திர காற்றை, இந்திய மக்கள்  சுவாசிக்க வேண்டும் என்று 11 ஆயிரம் போராளிகளுடன் களத்தில் நின்று போரிட்டு மறைந்த “மாவீரன் வரலாறு” என்பது ” திப்பு சுல்தானின் வரலாறு” ஆகும். அவரைப் பற்றியான வரலாற்று பக்கங்களில் இருக்கின்ற செய்திகளை பேசுவதற்கு முன்பாக பதிவு செய்ய வேண்டும்.

காரணம்.இன்னைக்கு இணைய ஊடகங்கள், பத்திரிக்கை, ஊடகங்கள், யூடியூப் சேனல்கள், facebookகள், twitter, இன்ஸ்டாகிராம், என்று சொல்லக்கூடிய பல்வேறு நவீன யுக்திகளை பயன்படுத்துகின்ற நமது அருமை தம்பிகள். திப்பு சுல்தானின் மாவீரன் உடைய பாதையை எங்கள்  இயக்கத்தின் சார்பாகவும்…  இங்கு வந்து இருக்கின்ற எனது அருமை தம்பி சபரி அவர்கள்,  இங்கே ஒரு யூடியூப் சேனலை நடத்திக் கொண்டிருக்கிறார். சேலம் முழுவதும் இருக்கிற மக்களுக்கும்,  தமிழக முழுவதும் இருக்கின்ற மக்களுக்கும் எடுத்துச் சொல்கின்ற ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறார்.

அதற்காக  இந்த நேரத்தில் அவர்களுக்கு  நன்றி சொல்லி… வரலாற்று செய்திகள்… வரலாற்று பக்கங்களில் பதியப்பட வேண்டும்  என்று…  எனக்கு கிடைத்த வரலாற்று பக்கங்களில் தேடி எடுத்த செய்திகளை உங்களோடு பதிவிட்டுக் கொண்டு சில செய்திகளை பேசி நான் நிறைவு செய்ய இருக்கின்றேன். தொடக்க காலத்தில் ஆங்கிலருக்கு சிம்மசுப்பமாக விளங்கி,  கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்து எரியும் அளவுக்கு பெரும் சவாலாக ஒரு மன்னன் இந்த தேசத்தில் வாழ்ந்து வந்தார் என்றால்,  அது மாவீரன் திப்பு சுல்தான் என்கின்ற மான மறவன்.

சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும், சமூக சீர்திருத்தியாகவும் விளங்கிய மாபெரும் நிர்வாகி. 1782 முதல் 1799 வரை மைசூர் பேரரசில்  மாவீரன் திப்பு சுல்தான் உலக தரத்திலான ராணுவத்தை உருவாக்கி உலகமே வியக்கின்ற வரலாற்று பிறவிகளுக்கு,  வரலாற்று பக்கங்களில் புதிய வரலாற்றை எய்தியவன். உலகத்திலேயே போர்க்களத்தில் உலகத்திலேயே முதல் ஏவுகணனை தந்திட்ட ஏவுகணை நாயகன்… அந்த திப்பு சுல்தானின் பேரன் தான் அப்துல் கலாம்,  எங்கள் அக்கினி ஏவுகணையை எங்கள் தேசத்திற்கு தந்திட்டவன்.

இது  இன்றே நேத்து தொடங்கிய அறிவு அல்ல… திப்புவின் ஜீனில் ஊறியது தான்எங்கள் அப்துல் கலாமின் ராமேஸ்வர  தமிழின் கண்டுபிடிப்பு. யுத்தத்தை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள்…  அப்பாவி மக்கள் மீது ஒருபோதும் வன்முறைகளை நடத்தாதீர்கள்,  பெண்களை கௌரவம் ஆக நடத்துங்கள், பிடிபட்ட கைதிகளின் மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுங்கள்.

குழந்தைகளுக்கு முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள் என்று தன் ராணுவத்திற்கு எழுத்து பூர்வமான உத்தரவை பிறப்பித்து,  ஒரு ஜனநாயக போரை எதிரிகளோடு… எதிரி நாட்டிற்கு போர்வீரர்களோடு…  எதிர் பிரிட்டிஷ் ஆதிக்க ராணுவத்தினோடு போரிட வேண்டுமே தவிர,  அப்பாவி பொதுமக்கள்… நம்  போர்க்களத்தில் மடிந்து விட கூடாது என்று…. பாதுகாத்து நின்று…. அரங்காக நின்று… போர் செய்ய தன் வீரர்களுக்கு உத்தரவு விட்ட மாந்தநேயம்….மனிதநேயம்… ஒதுங்கே பெற்ற மகத்தான வரலாற்றுக்கு சொந்தக்காரன் மாவீனன் எங்கள் மன்னன்.

இஸ்லாமிய மதத்தின் மீது முழு ஈடுபாடு கொண்டவனாக, மாமன்னன் விளங்கினாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்கள் மற்றும் பிற மதத்தவர் சுதந்திரமாக செயல்படுவதற்கு அனுமதித்தவர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய  அவர்,  மத ஒற்றுமையை இறுதிவரை கடைபிடித்தவர். போரில் வீழ்த்த முடியாத மாவீரனாக இருந்த திப்பு சுல்தானை, பிரிட்டிஷர்கள்… பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சூழ்ச்சி செய்து, அமைச்சர்களையும், அதிகாரிகளையும், விலை பேசி லஞ்ச, லாபனத்தையும் தந்து, ஆயுதமாக பயன்படுத்தி மாவீரன் திப்புவை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினார்கள்.

இந்த சூழ்ச்சியில் தான் 1899 ஆம் ஆண்டு நடைபெற்ற, நான்காம் மைசூர் போரில், மாவீரன் தீரமுடனும், துணிச்சலுடனும் போர் புரிந்து, எதிரிகளின் நயவஞ்சக செயலினால், பிரிட்டிஷ் படையின் தொடர் தாக்குதலை எதிர்த்து, களத்தில் 11 ஆயிரம் மாவீரர்களோடு போரிட்டு மாண்ட, இந்திய நாடு மட்டுமல்ல…. உலக நாட்டின் வரலாற்று பக்கங்களில் களத்தில் நின்று எதிரியோடு போரிட்டு மடிந்த, இந்த தேசத்தின் விடுதலைக்கு தியாகம் செய்த, மாவீரன் திப்பு சுல்தான் என்கிற வரலாற்று பதிவை ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார கும்பல்களே தெரிந்து கொள்ளுங்கள் என பேசினார்.