செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், விவசாயி உரங்களுக்கெல்லாம் மானியம் நேரடியாக கொடுப்பேன் என்று சொன்னார் பிரதமர் அவர்கள். ஆனால் இங்கு இருக்கிற நீங்களும், தமிழ்நாட்டில் இருக்கிற எந்த ஒரு குடிமகனாவது பெட்ரோல் பங்கில்  டீசல், பெட்ரோல்  அடிக்கிற போது வங்கி கணக்கை வாங்கிக்கொண்டு,  யாராவது ஒருவருக்காவது வங்கியில் இதுவரை மானியம் வந்திருக்கிறதா ?

இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன், பாரத் பெட்ரோலியம் போன்ற நான்கு எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது மக்களுக்காக…  ஆனால் பிஜேபி அரசு வந்த பிறகு அத்தனை எண்ணெய் நிறுவனங்களையும் தனியார் லாப நோக்கோடு நடத்துகின்ற வியாபார நிறுவனங்களாக மாற்றி,  ஒன்றிய அரசு  திமுக –  காங்கிரஸ் கூட்டணியாக இருந்த பொழுதம் ,  சுதந்திரம் வாங்கியதிலிருந்து…

பெட்ரோல்,  டீசலுக்கு கச்சா எண்ணெய் விலை ஏறினால் மானியம் கொடுத்துக் கொண்டிருந்தோம். அந்த மானியம் கொடுத்து வந்ததை நிறுத்திவிட்டு,  நேரடியாக மக்களுக்கு கொடுப்பேன் என்று சொன்னாரே ஒழிய,  எந்த மக்களுக்கும் கொடுக்கவில்லை. அந்த மானியமாக நிறுத்தியதன் மூலமாக ஆண்டுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வருமானம் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.