செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ்,  மழை – வெள்ளம் பாதித்த பொழுது நிவாரணம் கொடுப்பதாக அமித்ஷா வாக்குறுதி கொடுத்தார். நம்முடைய மாநிலத்திற்காகவே டெல்லியிலே பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூப்பாடு போட்ட நிர்மலா சீதாராமனும் வந்துவிட்டு சென்றிருக்கிறார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத்  சிங் வந்து சென்றிருந்தார். எந்த ஒரு நிதியும் கொடுக்காமல்,  மக்களை ஏமாற்றி விட்டு….

தமிழ்நாட்டில் வந்து பூமியை தொடுவது போல் குனிந்து கோவில் கோவிலாக செல்லுகின்ற மோடிக்கு, தமிழ்நாட்டு மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள். பிஜேபிக்கு,  ஹிந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம் ? அது ஒரு அரசியல் கட்சி. ஜனசங்கம் என்கின்ற ஒரு கட்சியை நடத்திக் கொண்டிருந்தார்கள். போனியாகத்த காரணத்தால் 1980 பிப்ரவரி மாதத்தில் இவங்க எல்லாரும் சேர்ந்து பாரதிய ஜனதா கட்சி என்று ஒரு கட்சியை ஆரம்பித்தார்கள்.

அந்த கட்சிக்கும்,  இந்துவுக்கும் என்ன சம்பந்தம் ? மதத்தின் பெயரை சொன்னால்தான்,  கோவில் பெயரை சொன்னால் தான்,  மக்கள் வாக்களிப்பார்கள் என்ற அடிப்படையில்….. இந்தியாவிலேயே மதத்திற்காக ஒரு கட்சி நடத்துகின்ற ஒரே கட்சி பிஜேபி தான். அதனால் இந்து மக்கள் இவர்களுக்கு சொந்தமில்லை…. இங்கு இருக்கின்ற நீங்களும் ஹிந்து தான்,  நானும் ஹிந்து தான்,  எல்லோரும் ஹிந்து தான்.

அனைத்து ஹிந்து மக்களையும்,  திமுக கட்சியோ,  திமுக அரசோ  எந்த இடத்திலும் புறக்கணிக்கவில்லை. ஹிந்து மக்களுக்கு மோடி ஒன்றும் அப்பாவும் அல்ல,  அம்மாவும் அல்ல. சொந்தக்காரரும் அல்ல….  அந்த கட்சி ஹிந்து பெயரை சொன்னால் வாக்கு போடுவார்கள் என்பதற்காக டிராமா போட்டு கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.