செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ்,  இந்தியாவிலேயே மதத்திற்காக ஒரு கட்சி நடத்துகின்ற ஒரே கட்சி பிஜேபி தான். அதனால் இந்து மக்கள் இவர்களுக்கு சொந்தமில்லை…. இங்கு இருக்கின்ற நீங்களும் ஹிந்து தான்,  நானும் ஹிந்து தான்,  எல்லோரும் ஹிந்து தான். அனைத்து ஹிந்து மக்களையும்,  திமுக கட்சியோ,  திமுக அரசோ  எந்த இடத்திலும் புறக்கணிக்கவில்லை.

ஹிந்து மக்களுக்கு மோடி ஒன்றும் அப்பாவும் அல்ல,  அம்மாவும் அல்ல. சொந்தக்காரரும் அல்ல….  அந்த கட்சி ஹிந்து பெயரை சொன்னால் வாக்கு போடுவார்கள் என்பதற்காக டிராமா போட்டு கொண்டு இருக்கிறார்கள்.  இது மதவாத சக்திகள் அல்லாத மதச்சார்பற்ற நாடு நம்முடைய நாடு. 17 மதம்… 17 மதத்தை சேர்ந்த மக்கள் வாழுகின்ற நாடு….  அத்துனை பேருக்கும் கோயில்கள் இருக்கின்றது….

நீங்கள் எல்லா கோவிலுக்கும் சென்று வாருங்கள்…  எல்லா மதத் தலைவர்களுக்கும்  ஒரு பிரதமர்,  நடுநிலையோடு இருக்க வேண்டும்…. ஒரு மதத்திற்காக செயல்படுவதாக,  பொய்யான வாக்குறுதியை கொடுக்கிற மோடி அவர்களுடைய ஆட்சிக்கு 60 நாள்தான் இருக்கிறது.  வீட்டுக்கு அனுப்புவதற்கு…. மோடியின் உடைய ஆட்சி ஆட்டம் அடங்குவதற்கு 60 நாள்தான் இருக்கிறது.

மோடியுடைய பொய் வாக்குறுதிகள் அடங்குவதற்கு 60 நாள்தான் இருக்கிறது. தேர்தல் முடிவு தெளிவாக இருக்கும் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல,  இந்தியா முழுவதும் எந்த கட்சித் தலைவர் வாக்களித்தும்,  எந்த கட்சியும் ஜெயிப்பது இல்லை. மக்கள் வாக்களித்து தான் வெற்றி பெறுகிறார்கள்.  அதனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.