உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி கலந்துகொண்ட ‘GOAT இந்தியா டூர்’ நிகழ்ச்சியின் இறுதிப் பகுதி, நேற்றுப் புது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கான இருக்கைத் டிக்கெட்டுகளை ரசிகர்கள் ₹6000 வரை கொடுத்து வாங்கியுள்ளனர். ஆனால், மைதானத்தின் இருக்கைகளில் பறவையின் எச்சங்கள் நிறைந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையேக் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
@district_india @delhi_cricket @deepigoyal “MESSY” arrangements for MESSI tour.
GOAT tour taken literally as people are made to sit on seats stained with BIRD POOP. Charging 6000₹ for such seatings. Absolutely horrible. pic.twitter.com/6byGUnsUPa— tweetfortat (@tweet_for_tat31) December 15, 2025
விமர்சனத்துக்குள்ளான இந்த வீடியோவில், பல இருக்கைகளில் பறவையின் எச்சக் கறைகள் படிந்திருப்பது தெளிவாகக் காணப்படுகிறது. இதனால், ரசிகர்களால் இருக்கைகளில் அமர முடியாத சூழல் ஏற்பட்டது.
அதிக விலைகொடுத்து டிக்கெட் வாங்கியும், தங்களுக்குச் சுகாதாரமற்றச் சூழ்நிலை வழங்கப்பட்டதாகக் கூறி, மெஸ்ஸி ரசிகர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு மைதானத்தின் நிலையைப் பராமரிக்காதது குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
